Tuesday, 5 November 2013

சகுனமும், சடங்குகளும்.

மக்களிடையே மண்டிக்கிடக்கின்ற
மூடநம்பிக்கைகளுள் சகுன
நம்பிக்கையும் ஒன்று. இதனால்
ஏற்படும் பாதிப்புகள், கேடுகள்,
இழப்புகள் ஏராளம்
என்பதோடு இவை உருவாக்கும் மன
உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி,
வாழ்விழப்பு போன்றவை ஏராளம்.
குறிப்பாக, விதவைப் பெண்களும்,
திருமணத்தை எதிர்நோக்கும்
இளம்பெண்களும் அடையும்
இழப்பும், இன்னல்களும் ஏராளம்.
ஒரு பெண்ணின்
வாழ்வையே பல்லியின் ஓசையில்
பலிகொடுக்கும் அவலமும் இதில்
அடங்கும். எனவே, சகுனம் பற்றிய
விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்ற
ி பெரியவர்களுக்கும் வேண்டும்.
சகுனங்கள் பல வகைப்படும்:
மனிதர்கள்: எதிரில் வரும்
மனிதர்கள் யார்?
என்பதை வைத்து சகுனம்
பார்க்கப்படுகிறது.
சலவைத் தொழிலாளி, பால்காரர்
எதிரில் வந்தால் நல்ல சகுனம்;
எண்ணெய்,
விறகு எடுத்துக்கொண்டு எதிரில்
வந்தால் கெட்ட சகுனம்.
காரணம், பால் மங்கலப் பொருள்.
அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர்
சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல
சகுனம். எண்ணெய்,
விறகு அமங்கலப் பொருள். எனவே,
அது கெட்ட சகுனம்.
விதவை வாழ்வு இழந்தவள்.
அதனால் கெட்ட சகுனம்.
சுமங்கலி வாழ்வுடையவள். எனவே,
நல்ல சகுனம்.
ஒலி: சங்கு ஊதினால்,
வெடிவெடித்தால் கெட்ட சகுனம்.
மணி ஒலித்தால் நல்ல சகுனம்.
பறவை: சில பறவைகள் கத்தினால்
நல்லது.
ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட
சகுனம்.
பல்லி: கத்துகின்ற இடத்தைப்
பொறுத்து நல்ல சகுனம், கெட்ட
சகுனம் என்று கொள்ளப்படுகிறது.
விலங்கு: கழுதை கத்தினால் நல்ல
சகுனம். பூனை குறுக்கே வந்தால்
கெட்ட சகுனம்.
தோணி(ஓடம்) : ஆற்றின்
இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம்.
அக்கரையில் இருந்தால் கெட்ட
சகுனம்.
தும்மல்: சிலர் தும்மினால் நல்ல
சகுனம். சிலர் தும்மினால் கெட்ட
சகுனம்.
வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச்
செல்லும் போது, காதில் விழும்
வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட
சகுனம் கணிக்கப்படுகிறது.
பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல்
பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம்.
தவறி விழுந்தால் கெட்ட சகுனம்.
தவறி விழுந்து பொருள் உடைந்தால்
பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.
மேற்கண்ட
சகுனங்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1. காட்சியின்
தன்மையை வைத்து நல்ல
காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட
காட்சியாயின் கெட்ட சகுனம்.
2. நாம் எதிர்நோக்கும் ஆளோ,
பொருளோ, வாகனமோ அமைவது,
சாதகமான நிலையாயின் நல்ல
சகுனம், பாதகமான நிலையாயின்
கெட்ட சகுனம்.
3. மரபுவிழா சொல்லப்படும்
சகுனங்கள்: முதலாவதாக, நல்ல
காட்சி - நற்சகுனம் கண்டால் -
நல்லது நடக்கும் என்பதும், கெட்ட
காட்சி - கெட்ட சகுனம் கண்டால்
கெட்டது நடக்கும் என்பதும், நம்
மனதில்
எழும்
வெறுப்பு விருப்புகளின்
வெளிப்பாடாகும்.
இரண்டாவதாக,
காட்சி சாதகமா அல்லது பாதகமா என்ப
தை வைத்து எழும் சகுன நம்பிக்கை,
நடக்கப்போகும் காரியத்தின்
முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக்
கருதும் அறியாமையால் எழுகிறது.
மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற
சகுன நம்பிக்கைகள் மரபு வழியில்
கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள்
ஆகும்.
விதவை என்பவள் வாழ்விழந்தவள்,
அலங்கோலப்படுத்தப்பட்டவள்.
எனவே, அவள் எதிரில் வந்தால்
கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை.
அவள் மீதுள்ள வெறுப்பால்
எழுந்தது. நடக்கப்போகும்
கெடுதலுக்கு அவள் எப்படிப்
பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க
வேண்டும்.
நடக்கப்போகும்
கெடுதலுக்கு வாழ்விழந்த
பெண்ணை, அபாய அறிவிப்பாக
ஆக்குவதும், அதை நம்புவதும்
அடிமுட்டாள்தனமல்லவா?
அநியாயம் அல்லவா?
நடக்குப்போகும் காரியத்திற்கு,
புறப்படுமுன் நல்லதாயின்
நல்லது நடக்கும் என்பதும்,
கெட்டதாயின் கெட்டது நடக்கும்
என்பதும், காட்சியோடு காரியத்தைப்
பொருத்திப் பார்க்கும்
மூடத்தனத்தின் விளைவாகும்.
இந்தக் காட்சிகளை பலமுறைச்
சோதித்துப் பார்த்தால், கெட்ட
சகுனத்தைப் பார்த்துச்
சென்றபோது நல்லது நடப்பதையும்,
நல்ல சகுனத்தைப் பார்த்துச்
சென்றபோது கெட்டது நடப்பதையும்
நாம் அறியலாம்.
எந்தவொரு காட்சியும்,
வார்த்தையும், ஒலியும்
நடக்கப்போவதை அறிவிக்கக்
கூடியவை அல்ல. எல்லாம்
நமது உள விருப்பு, வெறுப்பின்
வெளிப்பாடுகள்;
தொடர்புப்படுத்திப் பார்ப்பதன்
விளைவுகள்.
மேலும், ஒரே காட்சியை,
ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற
அனைவருக்கும் ஒரே மாதிரியான
பலன்கள் கிடைப்பதில்லை.
விதவையைப் பார்த்துச் சென்ற
ஒருவருக்குக் கெட்டது
நடந்திருந்தால்,
இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்
கும். எனவே, காட்சிகளுக்கும்,
நடக்கப்போகும் காரியங்களுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை என்பதை,
பிஞ்சுக் குழந்தைகள்
மட்டுமின்றி பெரியவர்களும்
நன்கு சிந்தித்து, சகுன
நம்பிக்கையென்னும்
மூடநம்பிக்கையை விட்டொழித்து ப
குத்தறிவுப் பாதையில்
பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட
வேண்டும்.

No comments:

Post a Comment