Wednesday, 23 October 2013

செயல்திறன் மிக்க பெண்ணாக மாறுவது எப்படி?

பெண்ணானவள் தன்னுடைய
வாழ்கையின் அனைத்து கால
கட்டத்திலும் பெற்றோர், சகோதரர்கள்,
நண்பர்கள், கணவர் என
தங்கி வாழ்கிறாள்.
இதனால் தனியாக
தனித்து போகின்ற போது அவளால்
பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும்
முகம் கொடுக்க முடியாமல்
துவண்டு போய் விடுகிறாள்.
சமூகம் அவளுக்கு கொடுக்கும்
அழுத்தத்தை சமாளிக்க
முடியாது திணறுகிறாள்.
சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள்
தங்களின் பெண் பிள்ளைகளை செயல்
திறன் மிக்கவர்களாகவும், ஆற்றல்
வாய்ந்தவர்களாகவும் வளர்க்க
வேண்டியது அவசியமாகும்.
செயல்திறன் மிக்க, ஆளுமை வாய்ந்த
பெண்ணாக செயல் பட இதோ சில
ஆலோசனைகள்.
* எப்போதும் உங்களை சூழ
உள்ளவர்கள் உங்களிடம் அதிக
உரிமை எடுத்து கொள்ள
அனுமதிக்காதீர்கள். சிலர்
சூழ்ச்சி திறன் மிக்கவர்களாக
இருப்பார்கள். சில சந்தர்ப்பங்கள்
தமக்கு சாதகமாக அமையும்
போது உங்கள் மூலம் நன்மை அடைய
முற்படுவார்கள்.
* புதியவர்களோடு பேசும்
போது பண்பாக தைரியாமாக
உங்களை அறிமுகபடுத்தி
கொள்வதோடு,
அவசியமில்லாதவற்றை அவர்களோடு
பேசாதீர்கள்
* முன்னைய காலங்களில் வீடு,
குடும்பம் என்ற வரையறைக்குள்
வாழ்ந்து வந்த பெண்
இன்று சமூகத்தில்
தனகென்று உயர்ந்த
இடத்தை பெற்று இருக்கிறாள்.
எனவே உங்களின்
திறமையை சரியாக அடையாளம்
கண்டு கொண்டு சாதிப்பதற்கு
முயற்சி செய்யுங்கள்.
* இதுவரை அரசியலிலும்
விண்வெளியிலும் என
மாறி மாறி சாதனை படைத்த
பெண்கள் ஏராளம். எனவே பெண்ணாக
பிறந்ததையிட்டு பெருமை
கொள்ளுங்கள். இது உங்கள் மனதில்
உள்ள நம்பிக்கைக்கு இன்னும்
உறுதி கொடுக்கும்.
* மற்றவர்களின்
விமர்சனங்களை சகித்து
கொள்ளுங்கள். விமர்சனம் பற்றிய
உங்கள்
அபிப்பிராயத்தை வெளிக்காட்டதீர்கள்
. மற்றவர்கள் எங்களை பற்றி என்ன
நினைப்பார்கள்
என்பதை பற்றி கவலைப்படாதீர்கள்.
அது கூடுதலான மன
அழுத்தத்தை தருவதோடு பலத்தையும்
குறைக்கிறது.
* உங்கள் தந்தை, கணவர்,
சகோதரனை தவிர ஏனைய
ஆண்களிடம் அதிக
அக்கறை காட்டாதீர்கள். இது பின்னர்
வேறு விதமான
விளைவுகளை ஏற்படுத்தும்.
* உங்களை பற்றி எப்போதும்
உயர்வாக மதிப்பிடுங்கள்.
பொதுவாக பெண்கள்
தம்மை பற்றி குறைவாகவே
மதிப்பிடுகிறார்கள். எப்போதும்
நீங்கள் அழகானவர்,
ஆளுமை மிக்கவராக
கற்பனை செய்து கொள்ளுங்கள்.
* உங்களிடம் உள்ள
திறமைகளை பட்டியல் இடுங்கள்.
உங்களை நீங்கள் விரும்பும்
துறையில் வளர்த்து கொள்ள
உதவும்.
* மற்றவர்கள்
உங்களை பயமுறுத்துவதற்கு
அனுமதிக்காதீர்கள். சில சமயம்
மற்றவர்கள் பயமுறுத்தும் விதமாக
பேசினால் தைரியமாக பதில்
அளியுங்கள். அல்லது உரிய
அதிகாரம் உடையவர்களிடம்
சென்று முறையிடுங்கள்.
சமயோசிதமாக எப்போதும் செயல்
படுங்கள்.
* பொது இடங்களில்
அவசியமில்லாமல் பேசுவதையும்.
சத்தமாக சிரிப்பதையும்
தவிர்த்து விடுங்கள்.
* கடமையை நேரம் தவறாது செய்ய
பழகி கொள்ளுங்கள். நல்ல
தலைமைத்துவம் மிக்கவாரக
உங்களை மாற்றி கொள்ளுங்கள்.
இது உங்கள்
மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.
* எப்போதும் உங்களுக்கு நீங்கள்
உண்மையாக இருங்கள்.
அது எப்போதும்
உங்களை வல்லமை மிக்கவராக்கும்..

No comments:

Post a Comment