குடும்பத்துக்கு நல்ல
குழந்தையாகவும் நாட்டுக்கு நல்ல
குடிமகனாகவும் வளர்த்தெடுக்க
வேண்டும்
என்பது ஒவ்வொரு பெற்றோரின்
ஆசையும் கனவுமாக இருக்கிறது.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
உயிருள்ள பொம்மைகள் போலத்தான்
அந்த குழந்தைகளை நாம்
எப்படி வளர்க்கிறோம் என்பதில்தான்
அந்த குழந்தைகளின்
வளர்ச்சியே அடங்கி இருக்கிறது.
ஒரு சிற்பக் கலைஞனால்தான்
களிமண்ணை அழகான சிற்பபமாக்க
முடியும். இல்லாவிட்டால்
அது கடைசிவரை களிமண் தான்.
இப்படி ஒரு சிலர் கையில்
குழந்தைகள் சிக்கிக் கொள்வதால்
தான் அக்குழந்தைகளின்
எதிர்காலமே பிரகாசிக்காமல் போய்
விடுகிறது.
நம்மில் பொருளாதார
ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். நல்ல
பண்புகளை குணநலன்களை
வழங்குவதற்கு பணம்
மட்டுமே அவசியம் என்பதில்லை.
நமது அணுகுமுறையும் பழக்க
வழக்கமும் நம் குழந்தைகளை
நல்வழிப்படுத்திவிடும்.
நாம் நல்வழியில் பயணித்தால்
குழந்தைகளும் அந்த பாதையில்
பயணிக்கத் தொடங்கிவிடும்.
குழந்தைகள் நம் வழிவந்தவர்கள்,
நாம் உருவாக்கியவர்கள்,
நமது கனவை நிறைவேற்ற
வந்தவர்கள் என்று நினைக்க கூடாது.
நம்மைப் போல
நமது குழந்தைகளுக்கு என்று
உணர்வும் சிந்தனையும்
எண்ணங்களும்
விருப்பு வெறுப்புகளும்
இருக்கிறது.
நமது விருப்பத்திற்கு ஏற்பதான்
அவர்கள் வளர வேண்டும் வாழ
வேண்டும் என்று நாம்
அவர்களை நிர்ப்பந்திக்க கூடாது.
நம்மைப் போல
அவர்களுக்கென்று கனவுகளும்
ஆசைகளும் இருக்கும்
அந்தக்கனவுகளும் ஆசைகளும்
நியாயம் எனில்
அவற்றை நிறைவேற்றித்தர நாம்
அவர்களுக்கு வழிகாட்டியாக
வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய
எங்கள் வழியில் தான் வர வேண்டும்
என்று அவர்களை கட்டாயப்படுத்தக்
கூடாது.
ஒரு வயது வரை அவர்கள் நம்
குழந்தைகள்,
அதற்கு பிறகு வளர்கிற
ஒவ்வொரு வருடமும் சுற்றுப்புற
சூழல் வெளிவட்டாரப் பழக்கம்,
நட்பு இவைதான்
ஒரு குழந்தையை வழி நடத்துகிறது.
நம் குழந்தை போகிற
பாதை சரிதானா என்பதைக்
கண்காணித்து அதை சரிப்படுத்தும்
பணிதான் நமக்கே தவிர,
இல்லை நான் செல்லும் பாதையில்
தான் நீ செல்ல வேண்டும்
என்று கட்டளை போடுவது வேறு
விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
குழந்தைகளை அவர்கள்
சுயசிந்தனையில் வளர விட
வேண்டும் மற்றக் குழந்தைகளுடன்
நமது குழந்தைகளையும்
ஒப்பிட்டு வளர்க்க கூடாது.
ஓப்பீடு என்பது குழந்தைகள்
மனதை கடுமையாக பாதிக்கும்
என்பதை நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும்
ஒவ்வொரு எண்ணம், ஆர்வம்,
சிந்தனை இருக்கும்.
குழந்தை எதை அதிகம் படிக்க
ஆர்வம் காட்டுகிறதோ அந்த
துறையில் குழந்தையின்
ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்த
வேண்டும்
அதை விட்டுவிட்டு நமது
ஆசைகளையும் கனவுகளையும்
குழந்தைகளின்
மீது திணித்து விட்டு அவர்களது
ஆசைக்கனவுகள்
சிதைந்து போவதற்கு பெற்றோர்கள்
காரணமாகி விடக்கூடாது.
குழந்தைகளின் கல்வி விடயத்தில்
நாம் ஒரு போதும் இடையூறாக
நிற்ககூடாது. இன்றைய சமூகம்
எப்படி போய்க்கொண்டு இருக்கிறது
என்றால் அடுத்த
சந்ததியினரை ஒரே திசையை நோக்கி
செலுத்திக் கொண்டிருக்கிறோம்
நாம் எல்லோரும்.
எல்லோருமே பொறியியல்
மருத்துவம் மட்டும் படித்தால் மற்ற
துறைகள் எங்கே போவது?
இவை மட்டும் தான் வாழ்க்கையா?
வேறு கல்வித்துறைகள்
வாழ்க்கையை தராதா? அபரிதமான
சம்பளமும் நல்ல வேலையும் தங்கள்
குழந்தைகளுக்கு கிடைத்துவிட்டால்
அதுவே போதும்
என்று நினைக்கிறார்கள்.
சமூகத்திற்கு பலவிதமான
மனிதர்களும்
தேவை என்பதை ஏனோ மறந்து
விடுகிறார்கள்.
தங்கள் குழந்தையை படிக்க
வைத்து நல்ல வேலை வாங்கிக்
கொடுத்தல் போதும். போராட்டம்
இல்லாமல்
வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள்
என்றுதான் எல்லா பெற்றோர்களும்
விரும்புகிறார்கள்.
போராட்டமே இல்லாமல்
வாழ்வது ஒரு வாழ்க்கையா?
வாழ்க்கையில் போராட நம்
குழந்தைகளுக்கு கற்று தர
வேண்டும். சுமைகள் பாரமாகத்தான்
இருக்கும், பாரமாக
இருக்கிறது என்பதற்காக
சுமையை தூக்காமல்
சென்று விடுவோமேயானால்
வாழ்க்கை எந்திரத்தனமாக
மாறிவிடும். என்றாவது ஒரு நாள்
வாழ்க்கை சலிப்பு மிக்கதாக
மாறிவிடும்.
சுவையற்ற பண்டம்
குப்பை என்பது போல சுவாரஸ்யமும்
சவாலும் இல்லாத
வாழ்க்கை குப்பையாகிவிடும்
என்பதை நாம்
குழந்தைகளுக்கு உணர்த்த
மறந்து விடக்கூடாது.
இன்றைக்கு வயதான பெற்றோர்
கவனிக்கப்படாமல்
புறக்கணிக்கப்படுவதற்க்கு
குழந்தைக்கு கல்வியும் பணமும்
சம்பாதிக்க கற்று கொடுத்த நாம்,
கடமைகளையும் பொறுப்புகளையும்
ஏற்று, அவற்றை நிறைவேற்றும்
பொறுப்புணர்வைக் கற்றுக்
கொடுக்காததே ஆகும்.
அன்பு காட்டவும் இரக்கம்
கொள்ளவும்
கற்று கொடுக்கவில்லை விளைவு
நாம் மட்டுமல்ல அவர்களும் மன
உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
குழந்தைகளின்
விருப்பு வெறுப்பு அறிந்து
அவர்களின்
திறமைகளை ஊக்குவித்தால் போதும்
சாதிப்பார்கள்.
குழந்தைகளுக்கு நற்பண்புகளை
சொல்லிகொடுத்தாலே போதும்
சமூகத்தைப்
பார்த்து பகுத்தறிந்து கொள்வார்கள்.
எழுபது எண்பது சதவீத மதிப்பெண்
பெறுபவர்களுக்குதான்
படைப்பு திறன் அதிகம் இருக்கும்.
அதற்கு மேல் மதிப்பெண்
பெறுபவர்கள் புத்தக
அறிவு நிரம்பியவர்கள்.
அவர்களிடம் ஒரு சமச்சீர்
வளர்ச்சி இருக்காது என்பது
கல்வியாளர்களின் கருத்து. ஆகவே,
புத்தக
அறிவோடு தனித்திறன்களுக்கான
மேடையும் நாம் அமைத்துக்
கொடுக்க வேண்டும்
ஒவ்வொரு குழந்தைகளும் பூக்கள்
மாதிரி. ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதம்.
நமது குழந்தையை பலவந்தபடுத்தி
இதைதான் படிக்க வேண்டும்
என்று நாம் வற்புறுத்தினால்
நிச்சயம் பலன் கிடைக்க
போவதில்லை.
குழந்தைகள் முரடனாக
அல்லது சமுகத்தில் இருந்து ஒதுக்க
பட்டவர்களாக மாறிவிடுவார்கள்.
எதிர்ப்பர்ப்புகளால்
அவர்களது வாழ்க்கை
திசைதிரும்புதல் கூடாது.
அதேநேரம், குழந்தைகள்
மீது அளவுக்கு மீறிய
அன்பை காட்டுதல் கூடாது.
இது ஆபத்தில் போய்முடியும்.
அளவான அன்புதான் சரி.
அன்னையின் அன்பு, தந்தையின்
உலக அறிவு இரண்டும் முறையாக
சரியாக
குழந்தைக்கு அமையுமேயானால்
குழந்தையின் வளர்சியில்
சந்தேகமே தேவை இல்லை.
எனவே கணவன் மனைவி இருவரும்
இணைந்து குழந்தைகளை வளர்க்க
வேண்டும். நல்லது ,
கெட்டது சொல்லிதரவேண்டும்.
தாயின் அன்பும் தந்தையின்
அரவணைப்பும் ஒருங்கே கிடைக்கப்
பெற்ற குழந்தைகள் வாழ்க்கையில்
மேலே மேலே உயரும்.
அந்த உயர்வை இன்று முதல் நம்
குழந்தைகளுக்கு நாமும் கொடுத்தால்
என்ன நமக்கென்று இருக்கும்
ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு,
நல்ல சந்ததிகள் தொடர்வதற்கு நல்ல
நல்ல பிள்ளைகளாக நம்
குழந்தைகளை உருவாக்குவோம்.
நம் இல்லங்களை நல்லதொரு
பல்கலைக்கழகமாக உருவாக்குவோம்.
Wednesday, 23 October 2013
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல, மிகப் பெரிய பொறுப்பான கடமையும் கூட.
Labels:
குடும்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment