Thursday, 31 October 2013

ஆண் பெண் நட்பு

தற்போது ஆண் பெண்
நட்பு என்பது இன்றியமையாதது.
பணிசெய்யும் இடங்களில்
ஆண்களுடன் பெண்கள்
வேலை செய்யும் நிலை உள்ளது.
ஒருவரிடம் உள்ள
திறமைகளை முழுமையாக
பயன்படுத்திக்கொள்ள நல்ல
நட்பு பயன்படும். தூய உணர்வுடன்
கூடிய நல்ல நட்பு உடன்
வருமானால் தொழில்
வளத்தை பெருக்க அதை விட பெரிய
பலம் வேறு எதுவும் இல்லை.
ஆண்-பெண்
நட்பு என்பது பொழுதுபோக்காக
அல்லாமல் ஒரு நல்ல லட்சியத்தின்
அடிப்படை யில் அமையுமானால்
அதைவிட உயர்ந்த விஷயம்
எதுவும் இருக்க முடியாது.
அலுவலகத்தில் ஆண்
நட்பு என்பது தவிர்க்க
முடியாததாகி விடுகிறது.
நல்ல பண்புடன் கூடிய
நட்பு ஆத்மாவிலிருந்து
வெளிவருமானால் அது வெளியுலக
சமுதாயத்தில் நம்மை வெற்றி பெற்ற
மனிதர்களாக உயர்த்திக்காட்டும்.
நட்பு என்பது அழகானது. உயர்ந்த
நட்பிற்கு ஆண்-பெண் பேதம்
கிடையாது. அப்படிப்பட்ட நட்பு பல
சாதனைகளை நிகழ்த்தும்
வல்லமை படைத்தது. உள்ளத்தின்
தூய உணர்வுகளை மட்டுமே பெற்று
வளரக்கூடிய நட்பு, வாழ்க்கையில்
பல வெற்றிகளை தேடித்தரும்.

No comments:

Post a Comment