Wednesday, 23 October 2013

பாசமும் பரிவு நிறைந்த இல்லற வாழ்விற்கு

வேகமாக சுழன்று கொண்டிருக்கும்
கால சக்கரத்தின் வேகத்திற்கு ஏற்ப
நாமும் வேகமாக இயங்க
வேண்டி உள்ளது. அதுவும்
விலைவாசி உயர்ந்து விட்ட இந்த
கால பகுதியில் குடும்பத்தில்
கணவன் மனைவி இருவரும்
வேலைக்கு சென்றால் தான்
வாழ்க்கை செலவை சமாளிக்க
கூடியாதாக உள்ளது.
கணவன் மனைவி இருவரும்
வேலைக்கு செல்பவர்களாக இருந்தால்
குடும்பத்தின் மீதான
அக்கறை கவனம் சில சமயங்களில்
இல்லாமல் போய்விடுகிறது.
எவ்வளவு வேலைபளு உள்ளவராக
இருப்பினும் குடும்பத்தின்
மீது காட்டும் பரிவு கவனம்
குடும்பத்தின் உறவுகள்
இடையே வலுவான
பிணைப்பை ஏற்படுத்த உதவும்.
குறிப்பாக கணவன்
மனைவி இருவருமே தங்களுடைய
பொறுப்பை உணர்ந்து செயல்படுதல்
அவசியமாகும். பணம் மட்டும்
வாழ்க்கையாகாது. பரிவும் பாசமும்
நிறைந்த குடும்பம்
மகிழ்ச்சி நிறைந்த அழகான
பல்கலைகழகமாக மாறுகிறது.
எங்களையும்
மறந்து ஓடிகொண்டிருக்கும் நாம்
குடும்பம் மகிழ்ச்சிகரமாக அமைய
சில விடயங்களில்
அக்கறை செலுத்துவோம்.
சிலர் மனதளவில்
அன்பு இருந்தால் போதும்
வெளிகாட்ட
தேவை இல்லை என்று
நினைக்கிறார்கள்.
இது முற்றிலும் தவறானதாகும்.
நீங்கள் உங்கள் குடும்பம்
மீது எவ்வளவு அன்பு
வைத்துள்ளீர்கள் என்பதை பேசும்
போது வெளிபடுத்துங்கள்.
உங்கள் வார்த்தைகளில்
அன்பு நிறைந்திருக்கட்டும்.
பரிவு வெளிபடட்டுக்கும்.
உங்களின் பெற்றோர், மாமி,
மாமனார் வேறு வீட்டில்
வசிப்பவர்களாக இருப்பின்
உங்கள் துணையை குழந்தைகளை
அழைத்து சென்று அவர்களை
மகிழ்ச்சி படுத்துங்கள்.
அலுவலகம் சென்ற பின்னும்,
மதிய உணவின் பின்னும்
தொலைபேசி அழைப்பை
ஏற்படுத்தி உங்கள்
வாழ்க்கை துணையிடம் 5
நிமிடம் பேசுங்கள். உங்கள்
உண்மையான
அக்கறையை வெளிபடுத்துங்கள்.
அல்லது அன்பாக SMS தனிலும்
அனுப்பலாம்.
உங்களுடைய குழந்தையின்
வளர்ச்சியில்
அக்கறை செலுத்துங்கள். அவர்கள்
இவ்வுலகில் மிக
முக்கியமானவர். நாளைய
தலைவர்கள் நம்முடைய
குழந்தைகள்.
எனவே அவர்களுக்காக நேரம்
ஒதுக்குங்கள்.
அவர்களுக்கு செவி கொடுங்கள்.
குழந்தைகளோடு அமர்ந்து
தொலைக்காட்சி பார்ப்பது,
பாடங்களை சொல்லி கொடுப்பது,
விளையாடுவது என
அரை மணி நேரத்தை
அவர்களுக்காக ஒதுக்குங்கள்.
குறிப்பாக குழந்தைகள் எந்த
வயதில் இருக்கிறார்கள்
என்பதை பொறுத்து பெற்றோரின்
அணுகுமுறை அமைய வேண்டும்.
டீன் ஏஜ் பருவத்தில் உள்ள
பிள்ளைகளாக இருப்பின்
அவர்களோடு நல்ல நண்பர்களாக
பழகுவதின் மூலம் அவர்களின்
மனதை புரிந்து கொள்ளாலாம்.
பரிசு பொருட்களை வாங்கி
கொடுப்பதன் மூலம்
அவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்
.அல்லது திடீரென்று உங்கள்
வாழ்க்கை துணையை குழந்தையை
சினிமா,
கடல்கரை என்று அவர்களுக்கு
பிடித்தமான
இடங்களுக்கு அழைத்து சென்று
மகிழ்ச்சி படுத்துங்கள்.
உங்கள் துணையோடு அன்பாக
நடந்து கொள்ளுங்கள். உங்கள்
வாழ்க்கை துணையோடு
முக்கியமான விடயங்களில்
கலந்தாலோசித்து முடிவு
எடுங்கள். ஒரு போதும் தனியாக
முடிவெடுக்காதீர்கள். கணவனும்
மனைவியும் ஒருவர் மீது ஒருவர்
அன்பு பாராட்டி,
தவறுகளை சொல்லி திருத்துவது
ஆரோக்கியமான
உறவை ஏற்படுத்தும்.
.கணவன் மனைவி இருவருக்கும்
இடையில்
ஒளிவு மறைவு இருக்க கூடாது.
இருவரும் ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு அனுசரித்து
விட்டு கொடுத்து நடப்பதன்
மூலம் மகிழ்ச்சியாக வாழ
முடியும்.. வேலைப்
பளு காரணமாகவோ வேறு
நெருக்குதல்
காரணமாகவோ வாழ்க்கைத்துணை
எதையாவது கூறிவிட்டாலும்
அதை பெரிதுபடுத்தாமல்,
அதே சமயம் அந்த விமர்சனம்
அல்லது குற்றச்சாட்டு உண்மை
என்று மனசாட்சி தெரிவித்தால்
அந்தத்
தவறை நீக்குவது அன்பு வளர
மட்டும் அல்ல, குடும்பம்
செழிக்கவும் நிச்சயம் உதவும்.
வாழ்க்கை துணையின்
எதிர்பார்ப்பை தெரிந்து அவற்றை
பூர்த்தி செய்யுங்கள்.
தன்னோடு அன்பாக, பிரியமாக
இருத்தல் வேண்டும்,
மனது புண்படும்படி பேசக்
கூடாது, கோபப்படக்கூடாது,
சாப்பாட்டில் குறை சொல்லக்
கூடாது, பலர் முன்
திட்டக்கூடாது, எப்போதும்
மனைவியை விட்டுக் கொடுக்க
கூடாது, முக்கிய
விழாக்களுக்கு சேர்ந்து போக
வேண்டும், மனைவியிடம்
கலந்து ஆலோசிக்க வேண்டும்,
சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும், மனைவியின்
கருத்தை ஆதரிக்க வேண்டும்,
மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும். பாராட்ட
வேண்டும்
போன்றவற்றையே மனைவி தன்
கணவனிடம் பொதுவாக எதிர்
பார்க்கிறாள்.
குடும்பத்தை பொறுப்பாக
கவனித்தால் எப்போதும் சிரித்த
முகம்,கணவன்
வீட்டாரிடையே அனுசரித்துப்
போக வேண்டும், அதிகாரம்
பணணக் கூடாது, கணவன்
குறைகளை வெளியே
சொல்லக்கூடாது. அன்பால்
திருத்த வேண்டும், சந்தேகப்படக்
கூடாது, குடும்பச்
சிக்கல்களை வெளியே சொல்லக்
கூடாது, வேலை விட்டு வரும்
கணவனை அன்பாக உபசரித்தல்
ஆகியவற்றை கணவன் தன்
மனைவியிடம் எதிர் பார்க்கிறார்.
குடும்பத்தில் அதிகாரமாக
ஆட்சி நடத்தாதீர்கள்.
கணவன் மனைவி இருவரும்
ஒருவரின் குற்றத்தைப்
பெரிது படுத்தாமையும்
பொறுத்தலும் மறத்தலும்
அமைதிக்கு வழிகளாகும்.

No comments:

Post a Comment