Friday, 25 October 2013

தாலி

தாலி என்பது திருமணத்தின்
போது ஆண் பெண்ணுக்கு கட்டும்
ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும்.
தாலி அணிந்த பெண்
திருமணமானவள் என்பது தாலியின்
முக்கிய குறியீடு. தாலி கட்டும்
வழக்கம் இந்து திராவிட மக்களிடம்
காணப்படுகிறது. பெண்ணிய
பார்வையில் ஆண்கள் தாம்
திருமணமானவர்
என்பதை வெளிப்படுத்த
எந்தவொரு குறியீடும் இல்லாமல்
பெண்ணிடம் தாலி, குங்குமம்,
மெட்டி என்று குறியீடுகளைத்
திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க
செயற்பாடாக பார்க்கப்படுகிறது
சங்க காலத்தில் தாலி
மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம்
போல இருந்தது. இந்தத் தாலியைப்
‘புதுநாண்‘ என்றனர். (அள்ளூர்
நன்முல்லையார் – குறுந்தொகை 67)
தாலி அணிந்த
பெண்களை வெள்ளிவீதியார்
‘வாலிழை மகளிர்’
என்று குறிப்பிடுகிறார். –
குறுந்தொகை 386
பெயர் வர காரணம்
தாலம் பனை என்ற
பனை ஓலையினால் செய்த
ஒன்றையே பண்டைக்காலத்தில்
மணமகன் மணமகள் கழுத்தில்
கட்டி வந்தபடியால் இதற்குத்
தாலி என்ற பெயர் வந்தது.
தாலமாகிய பனை ஓலையினால்
செய்தது என்பது இதன் பொருள்.
பனை ஓலைத்
தாலி அடிக்கடி பழுதுபட்டதால்
நிரந்தரமாக இருக்க உலோகத்தால்
ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.
பின்னாளில் அதனைப் பொன்னால்
செய்து பொற்றாலி ஆக்கினர்.
ஆயின் தாலியின் உண்மையான
அடையாளம் பொன்னில் செய்வதால்
அல்ல.
வெறுமே ஒரு விரலி மஞ்சளை
எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில்
முடிச்சுப் போடுவது கூடத்
தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து,
வெய்யிலில் காயவைத்து,
நீரில்லாமல் வற்றவைத்த
மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள்
என்று பெயர். விரல் விரலாய்
இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள்.
மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள்
நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின்
சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு,
கட்டுதல்” ஆகியவற்றில்
அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன்,
பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார்
மகளை இன்னார் சம்மதத்துடன்
இன்னார் முன்னிலையில் இந்த
நேரத்தில் இந்நாளில் கல்யாணம்
செய்துகொள்வதாக அனைவரும்
கையொப்பமிட அந்த
தாளினை கயிற்றில்
கோர்த்து மணமகளின் கழுத்தில்
மணமகன் கட்டியதாக
ஆய்வு சொல்கிறது. சுத்துரு,
சுத்திரி, மாங்களியம், மங்கலியம்,
மங்கலவணி என சொல்லும்
தாலியை – மண அடையாள
வில்லையைக் குறிக்கும்.
தாலி கட்டப்படும் முறை
இந்து முறை
கூறை உடுத்தி வந்த மணமகள்,
மணமகனின் வலப்புறத்தில்
கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த
சுபமுகூர்த்ததில் மணமகன்
எழுந்து மணமகளின் வலப்புறம்
சென்று வடக்கு நோக்கி நின்று
இறைவனைத் தியானித்து குருக்கள்
ஆசிர்வதிதுக் கொடுக்கும்
மாங்கல்யத்தை இரு கரங்களால்
வலப்புறம்
சென்று வடக்கு நோக்கி நின்று
இறைவனைத் தியானித்து குருக்கள்
ஆசிர்வதித்து கொடுக்கும்
மாங்கல்யத்தை (தாலி)
இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம்
முழங்க, வேதியர் வேதம் ஓத,
மாப்பிள்ளை வீட்டார் ஒருவர்
தேங்காய் உடைக்க, பெரியோர்
அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண்
பின்னால் தீபம் பிடிக்க மணமகன்
மேற்கு திசை நோக்கி திரும்பிப்
பெண்ணின் கழுத்தில்
திருமாங்கல்யம் பூட்டுவார்.
அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம
ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி
ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான்
சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக
மாங்கல்யத்தை உன் கழுத்தில்
கட்டுகிறேன். நீயும்
நூறாண்டு வாழ்வாயாக
என்று குருக்கள் கூறும்
மந்திரத்தை மனதில்
கொண்டு தாலி முடிச்சில்
திருநீறு இட்டு தனது இடத்தில்
இருக்க வேண்டும். மணமகளின்
உச்சந்தலையில் குங்குமத்தில்
திலகமிட வேண்டும்.

No comments:

Post a Comment