Wednesday, 23 October 2013

மங்களமும் மகிமையும் நிறைந்த குங்கும பொட்டு

காலா காலமாக திருமணமான
பெண்கள் நெற்றியில் குங்குமம்
அணிவது தமிழர் பண்பாடு.
தற்காலத்தில் குங்குமம்
அணிவது வெகுவாகவே
குறைந்துள்ளது.
ஆனாலும், பெண்கள் நெற்றியில்
குங்குமம் அணிவதற்கு பல
காரணங்கள் உண்டு. குங்குமம்
மங்கள பொருட்களில்
ஒன்று என்பதால் அதை நெற்றியில்
அணியும் போது, தீய சக்திகள்
விலகும் என்பது நம்பிக்கை.
அதிலும், குறிப்பாக
இரு புருவங்களுக்கிடையில்
குங்குமம் வைரந்து கொண்டால்
அவர்களை யாரும்
அவ்வளவு எளிதில் வசியம் செய்ய
முடியாது என்று சொல்லபடுகிறது .
மேலும், மஞ்சள், படிகாரம்,
சுண்ணாம்பு போன்ற
கிருமி நாசினிப் பொருட்களைக்
கொண்டு தயார் செய்யப்பட்ட
குங்குமத்தை பெண்கள் தங்களுடைய
நெற்றியின் மையப் பகுதியில்
அணிவதால்
உடலிலிருந்து மூளைக்குச்
செல்லும் நரம்புகளின்
வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.
மேலும், குங்குமத்தின் மேல் சூரிய
ஒளிப்படும்போது குங்குமத்தில்
உள்ள மூலிகை தன்மையும், சூரிய
சக்தியிலிலிருந்து வெளிப்படும்
விட்டமின் டி சக்தியும்
உடலுக்குள்
சென்று நன்மையை ஏற்படுத்தி
தருகிறது.
அதுதவிர ஏராளமான நன்மைகள்
குங்கும பொட்டு இடுவதினால்
கிடைகிறது. நெற்றியின் புருவ
மத்திக்கு நேர் பின்னால் மூளையின்
ஒரு பகுதியாக Pineal gland எனும்
நெற்றிக்கண்
சுரப்பி அமைந்துள்ளது.
இது மூளையின் ஒரு முக்கிய
பகுதி. இதனை நெற்றிக்கண்
எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன்
தொடர்புள்ள
புருவமத்தி ஒரு சக்தி குவியும்
இடமாகும்.யோகப் பயிற்சியில்
சுழுமுனை எனப்படுவுதும்
இப்பகுதியாகும்.
தெய்வத்துடன் தொடர்பு கொள்ள
உதவும் பகுதி இதுவாகும்.
யோகாசனப் பயிற்சியின்
போது மூச்சுப்
பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும்
போது நெற்றிக்கண் மீது கவனம்
குவிகிறது.
ஞானக் கண் என்றும் அழைக்கப்படும்
மனிதனின்
ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட
இன்னொரு நுண்ணறிவை எட்ட
இப்பகுதி உதவுகிறது. அன்றைய
ஞானியர், யோகிகள் ஆகியோர்
இதை உணர்ந்ததாலேயே நெற்றியில்
பொட்டு வைத்தக்கொண்டனர்.

No comments:

Post a Comment