Wednesday, 23 October 2013

பொட்டு வைத்த முகமோ

பெண்ணின் முகத்திற்கு இன்னும்
வசீகரத்தை கொடுப்பது பொட்டு.
முன்னைய காலங்களில்
நெற்றி நிறைய வட்டமாக குங்குமப்
பொட்டு வைப்பது வழக்கம்.
இரு புருவங்களுக்கு மத்தியில்
உள்ள இடத்தை நெற்றிப்
பொட்டு என்று கூறுவார்கள்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி,
நினைவாற்றலுக்கும் சிந்திக்கும்
திறனுக்கும் உரிய இடம் இந்த
நெற்றி பொட்டு தான். யோகக்
கலையில் இதனை ஆக்ஞா சக்கரம்
என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக்
என்ற மின்காந்த அலைகளாக மனித
உடல்
சக்தியை வெளிபடுத்துகிறது.
அதிலும் முன்நெற்றி மற்றும்
நெற்றிப் பொட்டு இரண்டும்
மின்காந்த
அலைகளை வெளியிடுவதில்
முக்கியமானவை. அதனால்தான், நம்
மனம் பிரச்சனைகளை எதிர் நோக்கும்
போது தலைவலி அதிகமாவதை
உணரலாம்.
நெற்றியில் இடும்
திலகமானது அந்தப் பகுதியைக்
குளிர்விக்கிறது. நம் உடலின்
சக்தி வெளியேறி விரயமாவதைத்
தடுக்கிறது. எனவே வெறும்
நெற்றியாக இருக்கக்
கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர்
பொட்டுக்களின் வருகைக்குப்
பின்னர் பல வித டிசைன்களில்
பொட்டுக்கள் மங்கையரின்
முகத்தை அலங்கரிக்கின்றன. நாம்
வைக்கும்
பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக
இருந்தால்
அது அழகினை அதிகரித்துக்
காட்டும். எனவே முக
அமைப்பிற்கு ஏற்ற
பொட்டுகளை கூறியுள்ளனர்
அழகியல் நிபுணர்கள்.
நீளமான பொட்டு
வட்ட வடிவான முகம் உடையவர்கள்
நீளமான
பொட்டுகளை உபயோகிக்கவேண்டும்.
நீளமான பொட்டு இவர்களது வட்ட
முகத்தை சற்று நீளவாக்காக
மாற்றியதுபோல் அழகு தரும்.
இவர்கள் நெற்றி சிறிதாக் இருந்தால்,
அவர்கள் புருவங்களுக்கு மத்தியில்
பொட்டு வைக்கவேண்டும்.
இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள்
சற்றே வித்தியாசமானவர்கள்
என்பதால் இவர்கள் குங்குமத்தினால்
பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை
அழகாக்கும். ஸ்டிக்கர்
பொட்டுக்களில் சிறிய அளவில்
நீளமான பொட்டுகள் முக
வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.
ஓவல் வடிவ முகம்
ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள்
புருவத்திற்கு சற்று மேலே
நெற்றியில் வட்டப்
பொட்டு வைப்பது அழகை
அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர்
பொட்டு வைத்தாலும் வசீகரமாக
இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக
பொட்டுகளை வைக்கக்கூடாது.
அகலம் அதிகமுள்ள
பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம்.
உருண்டை மற்றும்
முட்டை வடிவிலான பொட்டுகள்
இவர்களுக்கு பொருத்தமாக
இருக்கும். வண்ணத்துப்
பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள்
எடுப்பாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம்
உள்ளவர்களுக்கு அனேகமாக
எல்லாவகைப் பொட்டுகளும்
பொருந்தும். நெற்றி அகலமாக
இருந்தால், நீளமான
பொட்டுகளை பயன்படுத்த
வேண்டும். முக்கோண வடிவிலான
பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக
இருக்கும். அகலமான நெற்றியாக
இருந்தால், புருவத்தில்
இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல்
பொட்டுவைக்க வேண்டும்.
முகத்தின் வடிவம்
மட்டுமின்றி உடை, சரும நிறம்
போன்றவைகளும் பொட்டுடன்
சம்பந்தப்பட்டதுதான். அதனால்
அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும்
விதத்தில்
பொட்டு வைக்கவேண்டும்.
கோதுமை நிற சரும
பெண்களுக்கு எல்லா நிற
பொட்டுகளும் பொருத்தமாக
இருக்கும்.

No comments:

Post a Comment