வாழ்தலுக்கு தேவைபடுகின்ற
அடிப்படை தேவைகளில்
உணவு பிரதானமானது.
நமக்கு ஆரோக்கியத்தை தரும்
உணவை தயார் செய்யும் இடம்
சமையலறை.
இங்கிருந்துதான் ஆரோக்கியம்
ஆரம்பமாகிறது. ஆனால் நாம்
பெரிதாக இந்த
இடத்தை பற்றி அக்கறை படுவதில்லை
. வீட்டில் சுத்தமாக இருக்க
வேண்டிய முக்கிய பகுதிகள்
சமையல் அறையும் குளியல்
அறையும் தான்.
சமையல் அறை சுத்தம் இல்லாமல்
இருக்கின்றபோது கண்களுக்கு
புலப்படாத பல நுண் உயிரினங்கள்
உங்கள் சமையல் மற்றும்
உணவை தாக்குகின்றன.
அதன் விளைவாக உங்கள்
சுகாதாரத்திற்கு கேடு நிலவுகிறது.
சுத்தமற்ற சமையலறையில்
உணவு தயார் செய்வதனால்
உணவு நஞ்சாதல் மற்றும்
வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு
காரணமான கிருமி உணவில்
சேர்ந்து கொள்கிறது.
எனவே பக்டீரியா மற்றும் பிற
கிருமிகள் உணவை தாக்காத
வண்ணம்
சமையலறையை சுத்தமாகவும்
பாதுகாப்பாகவும் வைத்திருத்தல்
வேண்டும்.
எமது சமையல் அறை சுத்தமாக
இருக்கிறது என்று சொல்லுபவர்கள்
கீழே உள்ள
முறைகளை கடை பிடிக்கிறீர்களா
என்பதை உறுதி செய்யுங்கள்.
இதோ உங்கள்
சமையலறையை சுத்தமாக
வைப்பதற்கான வழிமுறைகள்.
முதலில் உங்கள் சமையலறையில்
பரந்து கிடக்கும் தேவையற்ற
பொருட்களை அகற்றி விடுங்கள்.
சிலருக்கு உள்ள பழக்கம், டின்கள்
போத்தல்கள் என எல்லாவற்றையும்
சேமித்து வைப்பது.
இவைதான் தூசுக்களின் இருப்பிடம்.
இது அனாவசியமானதாகும்.
இவை அனைத்தையும் முற்றாக
அகற்றி விடுங்கள்.
உங்கள் குளிர் சாதன பெட்டியை,
சுத்தமாகவும் மற்றும்
நேர்த்தியாகவும்
வைத்து கொள்ளுங்கள். வாராந்தம்
சந்தைக்கு செல்ல முன் குளிர்சாதன
பெட்டியிலும், பொருட்கள்
அடுக்கும் தட்டுகளிலும் உள்ள
பழைய அழுகிய
உணவை எடுத்து வீசி விடுங்கள்.
கொள்கலனில் அடைக்கபட்ட
உணவுகளின்
காலாவதி திகதியை உறுதி செய்து
கொள்ளவும். குளிர்சாதன
பெட்டியில் நீண்ட
நாட்களுக்கு உணவு வைத்திருக்கும்
பழக்கத்தை கொண்டிருக்காதீர்கள்.
அழுகிய உணவுகள்
பக்டேரியாவை இலகுவில் பெருக்க
கூடியது. இதனால்
அத்தோடு சேர்த்து வைக்க படும்
புதிய உணவும் விரைவில்
கெட்டு போகிறது.
குப்பை கூடையை எப்போதும்
மூடி வையுங்கள், ஈக்களையும்
பூச்சிகளையும் கவரும் மணம்
இங்கிருந்துதான் உருவாகிறது.
குப்பை கூடை நிரம்ப முதல் கெட்ட
வாசனை வருமானால் உடனடியாக
குப்பை கூடையை சுத்தம்
செய்யவும். இதை தினமும் செய்ய
தவறாதீர்கள். இதனால் கிருமிகள்
பெருக்கம் கட்டுபடுத்தபடுகிறது.
வெவ்வேறான
உணவுகளை வெட்டுவதற்கு தனியான
வெட்டும் பலகைகளை பயன்
படுத்துங்கள். (அசைவ
உணவுகளை மரக்கறிகளை
வெட்டுவதற்கு வெவ்வேறான
பலகைகளை உபயோகியுங்கள்)
குறிப்பாக
இறைச்சி வகைகளை வெட்டுவதற்கு
பயன்படுத்தும் பலகைகளை நன்றாக
கழுவி சுத்தம் செய்யுங்கள்.
சமையலறை பாத்திரங்களை துப்பரவு
செய்யும்
துணியை ஒவ்வொரு நாளும்
மாற்றுங்கள்.
பாத்திரங்களை துப்பரவு செய்யவும்,
சமைலறையை துப்பரவு செய்யவும்
ஒரே துணியை பாவிக்காதீர்கள்.
சுத்தம் செய்ய பயன் படுத்தும்
துணியை சுடுநீரிலும்,
பொருத்தமான ப்ளீச்
பயன்படுத்தி கழுவுங்கள்.
சமையல்அறை தரையை எப்போதும்
சுத்தமாக வைத்திருக்க,
தரை கிருமி அகற்றும்
சுத்தமாக்கிகள் மூலம்
துடைத்து சுத்தபடுத்துங்கள்.
குளிர்சாதன பெட்டியின்
கதவு பிடி , சமையலறையில் உள்ள
கதவு கைபிடிகள் , சுவிட்ச்
போன்றவற்றை அடிக்கடி கிருமி
நீக்கி கொண்டு சுத்தபடுதுங்கள்.
(சந்தையில் கிடைக்க பெறும்
கிருமி அகற்றி கொண்டு).
வெற்று கண்ணுக்கு தூய்மையானது
போல் அவை தோற்றம் அளித்தாலும்,
கண்களுக்கு புலப்படாத
பாக்டீரியாக்கள் அவற்றில்
பரவி இருக்கும்.
உங்களுக்கு செல்ல பிராணிகள்
இருந்தால்,
சாப்பாட்டுக்கு பிறகு அவர்களின்
அழுக்கான
உணவு வகைகளை வெளியில்
விட்டு செல்லாதீர்கள். அவை ஈக்கள்
மற்றும் கொறித்துண்ணிகள்
போன்றவையை கவர்கிறது.
அத்தோடு உங்கள் செல்ல
பிராணிகளின் முடிகள்
கண்களுக்கு புலப்படாத வகையில்
உணவுடன் கலந்து விட்டால்
ஒவ்வாமைகள் மற்றும்
ஆஸ்துமா போன்ற நோய்கள்
உண்டாகும். செல்ல பிராணிகளின்
உணவு தட்டுகளை சமையலறையில்
ஒரு போதும் வைக்காதீர்கள்.
சமையல் செய்யும் போது எண்ணெய்
மற்றும் உணவு துகள்கள்
அடுப்பை சூழவுள்ள பகுதியில்
சிந்துகின்றன.
எனவே ஒவ்வொரு தடவையும்
உணவு சமைத்த பின்னர்
அடுப்பை துப்பரவு செய்யுங்கள்.
சமையலறையில் வேலை செய்யும்
போதும் சுத்தம் செய்யும் போதும்
கையுறைகள் மற்றும் பொருத்தமான
ஆடையை அணியவும்.
Wednesday, 23 October 2013
சமையலறையில் இருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கியம்
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment