கோபம் தன்னையே அழித்து விடும்
என்று சொல்வார்கள். கோபமும்
சந்தோஷமும்
ஒன்றுக்கு ஒன்று எதிரானவை.
கோபம் என்பது இயல்பான
ஒரு மனித உணர்வு. ஆனால்
அது கட்டுப்பாட்டை இழக்கின்ற
போது மிக பெரிய
விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அது உங்கள் தனிப்பட்ட
உறவுகளில், வேலை தளங்களில்
பிரச்சினைகளுக்கு வழி
வகுக்கின்றது. மற்றும் உங்கள்
வாழ்க்கை தரத்தினை ஒட்டு
மொத்தமாக மாற்றி விடுகிறது.
சிலருக்கு எவ்வளவு முயற்சி
செய்தாலும் கோபத்தை கட்டு படுத்த
முடியாமல் உள்ளது.
கோபம் ஏற்படும் போது உடலியல்
ரீதியாக பல மாற்றங்கள்
ஏற்படுகிறது. இரத்த அழுத்தம்
அதிகரிப்பதோடு ,ஹோர்மோன்கள்
சுரத்தலிலும் மாற்றங்கள்
ஏற்படுகிறது. கோபம் புற
நிகழ்வுகளாலும் அக
நிகழ்வுகளாலும் ஏற்படுகிறது.
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நபர்
மீது (உங்களோடு பணியாற்றுபவர்
அல்லது மேல் அதிகாரி)
அல்லது ஏதாவது நிகழ்வு (ஒரு
போக்குவரத்து நெரிசல், விமானம்
ரத்தாகும் போது ) அல்லது உங்களின்
தனிப்பட்ட பிரச்சினைகள்
பற்றி கவலை படும் போது கோபம்
ஏற்படலாம்.
அதிர்ச்சிகரமான அல்லது மறக்க
முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய
நிகழ்வுகளின் நினைவுகள் கூட
கோப உணர்வை தூண்டிவிடும்.
கோபத்தின் போது அநேகமானவர்கள்
தம்மையே மறந்து என்ன
பேசுகிறோம், என்ன செய்கிறோம்
என தெரியாமல் தங்களின்
கோபத்தை வெளிப்படுத்தி
விடுகிறார்கள்.
சிலர் மற்றவர்களை விட இலகுவில்
விரைவாக கோபம் அடைகின்றனர்.
ஒரு சிலர் தங்கள்
கோபத்தை வெளிபடுத்தாவிடினும்
மனதில்
அடக்கி வைத்து கொள்கின்றனர்.
விரோதமாக மாறும்
அளவு அவர்களின் கோபம்
அமைந்து விடுகிறது.
கோபத்தை கட்டு படுத்த
உளவியலாளர்கள் சொல்லும்
ஆலோசனைகள்
சுய கட்டுபாடு
கோபத்திற்கான
எதிர்செயலை (Reaction)
வெளிபடுத்த முன் பிரச்சனைக்கான
சாத்தியமான தீர்வை கண்டறியுங்கள்.
உங்களின்
கோபத்தை வெளி படுத்தினால்
என்ன விதமான விளைவு ஏற்படும்
என்பதை 5 நிமிடம் நிதானமாக
யோசியுங்கள். அதேபோல்
பிரச்சனைக்கான
தீர்வை கையாள்வதனால் ஏற்படும்
நன்மையை பற்றியும்
யோசித்து பாருங்கள்.
நேரம் எடுத்து கொள்ளுங்கள்
கோபத்திற்கான
உணர்ச்சியை வெளிபடுத்த முதல்,
ஆழமாக மூச்சை உள்
எடுத்து விடுங்கள். மூச்சை உள்
எடுத்து விடும்
போது "அமைதி (Relax )"
அல்லது "இலகுவாக எடுத்து கொள்
(Take it easy)" எனும்
வார்த்தைகளை தொடர்ந்து
சொல்லுங்கள். அல்லது 10
வரை எண்ணுங்கள். இந்த
பொறுமை உங்கள் கோபத்தை தணிக்க
உதவும். தேவைப்பட்டால் உங்கள்
விரக்தி கோபம் குறையும்
வரை கோபத்தோடு தொடர்பு பட்ட
நபர் அல்லது நிலைமையில்
இருந்து விலகி இருங்கள்.
உங்களின் உணர்வை சரியான
முறையில் வெளிபடுத்துங்கள்
நீங்கள் அமைதியானதும் உங்கள்
கோபத்தை வெளிபடுத்துங்கள்
(கோபத்தை கட்டுபடுத்துவது வேறு
விதமான விளைவை ஏற்படுத்தும்).
மற்றவர்கள்
காயப்படுத்தி அல்லது கட்டுப்படுத்த
முயற்சி செய்யாமல், தெளிவாக
நேரடியாக உங்கள்
கவலைகளை மற்றும்
தேவைகளை குறிப்பிடுங்கள்.
சில உடல்
பயிற்சிகளை மேற்கொள்ளல்
உடல் பயிற்சி உங்கள்
கோபத்தை கட்டு படுத்தும். உங்கள்
கோபம் அதிகரிகிறது என
நினைத்தால், ஒரு விறுவிறுப்பான
நடைப்பயணத்தை செய்யுங்கள்,
அல்லது மற்ற பிடித்த உடல்
பயிற்சிகளை சிறிது நேரம்
செய்யுங்கள். உடல் ரீதியான
செயல்பாடுகள் நீங்கள் முன்பு இருந்த
நிலையை விட சந்தோஷமாக
இருப்பதற்கான
இரசாயனத்தை மூளையில் சுரக்க
செய்கிறது.
பேசுவதற்கு முன் யோசியுங்கள்
கோபத்தின் போது எதையும்
சொல்வது இலகுவாக இருக்கும்.
ஆனால்
சொல்லியதை நினைத்து வருத்த பட
வேண்டி இருக்கும். சிந்திய
வார்த்தைகளை மீண்டும் பெற
முடியாது.
"நான்" என்ற
வார்த்தையை இணைத்து கொள்ளுங்கள்
நீங்கள் சொல்லும் வாக்கியத்தில்
"நான்" என்ற
வார்த்தையை இணைத்து கொள்ளுங்கள்
. உங்கள் மீதான குற்றம்
குறையை இது தவிர்க்கும். நீ
அல்லது நீங்கள் என
மற்றவரை சுட்டி காட்டும்
போது மற்றும்
ஒரு பிரச்னைக்கு வழி வகுக்கும்.
உதாரணமாக "நீ எந்த
வீட்டு வேலையும் செய்வதில்லை"
என்பதற்கு பதிலாக"
வீட்டை சுத்தபடுத்த எந்த உதவியும்
நீங்கள் செய்யாததை நினைத்து நான்
மிக வருத்தமடைந்தேன் "
சொல்வது சிறந்தது .
எதிரியையும் மன்னியுங்கள்
எல்லோரும் எல்லா நேரமும் நாங்கள்
விரும்பியவாறு நடக்க மாட்டார்கள்.
எனவே உங்கள்
விருப்பத்திற்கு மாறான சம்பவம்
நிகழும் போது சம்பந்தபட்டவர்
உங்கள் எதிரியாக இருந்தாலும்
மன்னிப்பு கொடுங்கள்.
அது அவரையும் உணர வைக்கும்.
மன்னிப்பு ஒரு சக்தி வாய்ந்த
கருவியாக இருக்கிறது.
நகைச்சுவையாக பேசுங்கள்
பதட்டத்தை விடுவிக்க
நகைச்சுவையை பயன்படுத்துங்கள்.
நகைச்சுவை உணர்வு எமது கோபம்,
பதட்டம் எல்லாவற்றையும்
குறைக்கிறது. நகைச்சுவையாக
பேசும்போது கிண்டல் செய்யாமல்
பேசுங்கள். அது மற்றவர்
மனதை காயப்படுத்தும்.
பிரச்சினையை கண்டறிதல் (சுய
விழிப்புணர்வு)
நீங்கள் ஏன் எதற்காக
கோபபடுகிறீர்கள்
என்பதை அவதானியுங்கள்.
எப்படியான விடயம்
உங்களை கோபபடுத்துகிறது என்பதை
யோசித்து பாருங்கள்.
உங்களை நீங்களே கேளுங்கள்.
எது என்னை கோபப்படுத்தியது?
இவ்விதமாக
உங்களை நீங்களே கேள்வி கேட்பதன்
மூலம் உங்கள் கோபத்திற்கான
காரணங்களை நீங்கள் உணர
கூடியதாக இருக்கும். கோபம்
என்றால் என்ன, என்னென்ன விடயம்
உங்கள் கோபத்தை தூண்டுகிறது,
உங்கள் கோபத்திற்கான
அறிகுறி என்ன
என்பதை கண்டறியுங்கள்.
Wednesday, 23 October 2013
வேண்டாம் கோபம்
Labels:
குடும்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment