தெரிந்து கொள்வோம்: Li-Fi Technology...
தொழில்நுட்ப உலகில்
Li-Fi Technology
குறித்து ஒரு பார்வை,
தொழில்நுட்ப சுருக்கம்:
மாறிவரும் இணைய தொழில்நுட்ப
வளர்ச்சியில் தொழில் மற்றும் அதன் சார்ந்த
நிறுவனங்களில்
பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக
உள்ளது.
அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முறை தான்
Li- Fi. இதன் செயல்பாடுகள் அனைத்தும் Wi –
Fi யை ஒத்திருக்கும். ஆனால் Wi –Fiல்
செயல்படுத்தப்படும் hacking சமந்தமான
முறைகளுக்கு Li –Fiல் இடமில்லை.
இது சாதாரணமான
வெளிச்சத்தை பயன்படுத்தி இயங்ககூடியது.
இதில் Router மூலமாக பெறப்படும்
அனைத்து இணைப்புகளும்
வெளிச்சத்தை ஏற்படுத்தும் LED
பல்புகளில் இணைக்கப்பட்டிருக்கும்.
இணையத்தை பயன்படுத்த இந்த
வெளிச்சமானது நாம் பயன்படுத்தும் இணைய
கருவியின் மீது விழ வேண்டும். இதன்
மூலம் மற்ற தேவையற்றவர்களிடம்
இருந்து தனது இணையத்திற்கு பாதுகாப்பு
கிடைக்கிறது.
செயல்படும் விதம்:
LED ஆனது Transmitter போல
செயல்படுகிறது. LEDயை நினைத்த
நேரத்தில் எளிதில் அணைகவும், ஏற்றவும்
முடியும். அணைத்த நிலையில் 0 என்ற
signal யையும், ஏற்றப்பட்ட நிலையில் 1
என்ற signalயையும் LED அளிக்கும். 1 என்ற
signal தான் காற்றில் பரவி கருவியில்
இணைக்கப்பட்டுள்ள photodetector என்னும்
கருவி மூலம் இணையத்தை இயக்க
பயன்படுகிறது.
Photodetector தனது மீது படும்
வெளிச்சத்தை மின்சார சக்தியாக மற்ற
பயன்படுகிறது.இதன் மூலம் பெறப்படும்
signalன் அளவானது 10,000 -20,000pbs
என்ற விகிதத்தில் இருக்கும்.
இந்த ஒளிக்கற்றையானது சிகப்பு,
ஊதா மற்றும் பச்சை என ஒரு கலவையாக
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
LEDல் இருந்து வரும் ஒளிக்கற்றையின்
அளவை பொறுத்து இணையத்தின் வேகம்
அமைகிறது. 100MB/s என்ற அளவு வேக
திறனை அளிக்கவல்ல அந்த
கற்றையானது மனித கண்களால் பார்க்க
முடியாத படி அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட முறையினால் பயனாளிகள்
பயன்படுத்தும் இணையமானது அதிக
இடத்தில் பயன்படுத்தப்பட்டாலும், சிறந்த
பாதுகாப்பு திறனை பெற்று
விளங்குகிறது.
இதன் பயன்பாடு முற்றிலும்
இப்போது இல்லாவிட்டாலும், IEEE 802.15.7
ல் ஒரு பகுதியாக
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை முழுமையாக பயன்படுத்த ஆய்வுகளும்
நடந்து வருகிறது.
No comments:
Post a Comment