வீட்டு அலங்காரம் சில ரிப்ஸ்
உங்கள் வீட்டை உடலுள்ள, உணர்வுள்ள,
உயிருள்ள உன்னதமாக மாற்ற சில எளிய
வழிகள் இதோ...
ஓட்டம் (Flow)
வீட்டினை வடிவமைக்கையில்
அதனை ஒரு மொத்தவெளியாக (space as
whole) கருத்தில்கொண்டு வடிவமைக்க
வேண்டும். பகுதி பகுதியாகப்
பிரித்து ஒவ்வொரு பகுதியையும்
மாறுபட்ட சாயல்களில் வடிவமைத்தல்
அத்தனை சரியன்று. மொத்தத்தில்
வீடு முழுக்கவே ஒரு ஃப்ளோ - அதாவது,
ஒரு தொடர்ச்சியான பாய்ச்சல் இருக்க
வேண்டும். அனைத்து அறைகளிலும் இந்த
ஒற்றுமையின் சாயல்
ஆங்காங்கே தென்படவேண்டும்.
உதாரணமாக... வரவேற்பறையில் நாம்
பயன்படுத்தப் போகும் வண்ணத்துக்கும்
படுக்கை அறை வண்ணத்துக்கும்
இடையே ஒரு ஒற்றுமையும் இசைவும்
இருந்தால் மாத்திரமே இந்த
ஃப்ளோவை நம்மால் உணர இயலும்.
இல்லையெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
வண்ணங்களும் வடிவங்களும் நிற்க, வீட்டினைப்
பார்க்கும்போது ஒரு குழப்பமான
தன்மை மாத்திரமே நிலவும்
உங்கள் கவனத்துக்கு...
ஒரு வீட்டின்
‘ஃப்ளோ’வை சாத்தியப்படுத்துவது வண்ணங்களே
. அதனால் வீட்டுக்கான வண்ணங்களைத்
தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் கவனம்
அவசியம்
சமநிலை (Balance)
வீட்டின் உள்ளே அலங்காரத்துக்காக
அல்லது பயன்பாட்டுக்காக நாம் வைக்கப்
போகும் பொருட்களில்
ஒரு சமநிலை இருக்குமாறு
பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதை பொருத்தமுள்ள
சமநிலை (symmetrical balance),
பொருத்தமற்ற சமநிலை (asymmetrical
balance) என இருவகையாக பிரித்து உள்
அலங்காரம் செய்யலாம்
உதாரணமாக...
கதவின் இருபுறமும் ஒரே அளவிலான
ஓவியங்களை மாட்டுவது அல்லது
நிலைக்கண்ணாடியின் இருபுறமும்
ஒரே அளவிலான மெழுகுவர்த்தித்
தாங்கிகளை (candle stands)
மாட்டுவது பொருத்தமுள்ள
சமநிலை எனப்படும் இப்படி அல்லாமல்
பொருத்தமற்ற சமநிலையாகவும்
வடிவமைத்துக் கொள்ளலாம்..
உதாரணமாக...
வரவேற்பறையின் சுவரில் மாறுபட்ட
அளவிலான பல புகைப்படங்களை மாட்டிக்
கொள்வது. எனினும் முக்கியமாக கவனிக்க
வேண்டியது - அநேகமாக எல்லாப்
பொருட்களும் ஏதோ ஒருவகையில்
ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவையாக இருக்க
வேண்டும் என்பதே! மிகச்சிறிய
வரவேற்பறையில் மிகப்பெரிய திவான்
போடுவதென்பது அந்த அறையின்
அமைப்பையே கெடுத்துவிடும். இதுபோன்ற
சமநிலையற்ற ஏற்பாட்டினைத் (non
balancing arrangements)
தவிர்த்தாலே போதும்... கூடுதலான
அலங்காரம் எதனையுமே நாம் செய்யத்
தேவையில்லை!
உங்கள் கவனத்துக்கு...
அறைகளின் அளவு மிகச்சிறியதாக
இருக்கும் பட்சத்தில் அங்கே பெரிய பெரிய
அறைகலன்களைப் (furniture) போடுவதைத்
தவிருங்கள்.
மையப்புள்ளி (Focal Point)
ஒவ்வொரு அறைக்கென்றும்
ஒரு மையப்புள்ளியை அதாவது, ஃபோகல்
பாயின்ட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இந்த மையப்புள்ளியானது அனைவரையும்
ஈர்க்கக்கூடிய வகையில் - அதாவது, நம்
மனதுக்கு மிகவும் நெருக்கமான வகையில்
இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக அந்த
மையப்புள்ளி என்பது அவ்வறையில்
வைக்கப்போகும் நம் பாரம்பரிய
குத்துவிளக்காக இருக்கலாம்.
அல்லது அறையின் ஒருபக்கச் சுவரில்
மட்டுமே அடிக்கப்பட்ட அடர்வண்ண பெயின்ட்
அல்லது ஒரு பக்க சுவரில் மாட்டப்பட்ட
ஒரு தஞ்சாவூர் ஓவியமாக இருக்கலாம்.
கூடுமான வரையில் ஒரே அளவிலுள்ள
மிகப்பிரமாண்டமான
இரு பொருட்களை ஒரே அறையில் வைப்பதைத்
தவிருங்கள். ஒரு தஞ்சாவூர் ஓவியத்தின்
அருகிலேயே ஒரு எம்.எஃப்.ஹுஸைன்
படத்தை மாட்டி வைப்பது போன்றவற்றைத்
தவிர்ப்பது நலம். ஏனெனில்
இரண்டுமே களையிழக்கும் அதிக
வாய்ப்பு இதில் உண்டு!
உங்கள் கவனத்துக்கு...
ஒன்றுக்கு மேற்பட்ட ஃபோகல் பாயின்ட்
விஷயங்களை ஒரே அறையில் வைப்பதைத்
தவிர்க்கவும்.
Saturday, 15 March 2014
வீட்டு அலங்காரம்
Labels:
குடும்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment