சிந்து சமவெளி நாகரீகம் உலகில் மிகச் சிறந்த நாகரீகம்!!
பாரதத்தின் அடுத்த ஊடுருவல் அரேபிய முஸ்லிம்கள்.கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்தே பகைவர்களாக இந்துக்களும் முஸ்லிம்களும் விளங்கி வந்தனர்.
கி.பி பத்தாம் நூற்றாண்டில் ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கவே அரேபியர்களின் முற்றுகையும்,மக்களை மதம் மாற்றும் செயலும் வேகம் கண்டது.ஏற்கனவே பல்வேறு ஆட்சிகளால் பிளவுபட்டிருந்ததனால் முஸ்லிம்கள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் துருக்கியர்கள் வெற்றி கண்டனர்.காரணம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரே மதம்,ஒரே இனம்.ஆனால் இந்துக்களிலோ பல இனம்,பல்வேறு மதம்.மேலும் ஒற்றுமையின்மையோடு பௌத்த மதம் போதித்த அஹிம்சையும் இந்திய மக்களிடையே ஊறியதால் போரிடும் தன்மை என்பது குறைந்தே போயிற்று.
அரேபியர்களிடம் உலகிலேயே மிகச் சிறப்பான குதிரைப் படை இருந்தது.ஆனால் இந்து மன்னர்களோ இன்னும் யானைகளை நம்பிக்கொண்டு இருந்ததால் போர்க்களத்தில் தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.கி.பி 1226 இல் அல்ட்முஷ் (Altamush )என்பவர் இந்தியாவின் சுல்தான் என்று தம்மை பிரகடனப்படுத்தக் கொண்டார்.டெல்லியை ஆட்சி புரிந்த 26 முஸ்லிம் மன்னர்களில் இவர் முதலாமவர்.இவரது ஆட்சியில் மக்கள் பலத்த துன்பங்களுக்கு உள்ளானார்கள்.
இவ்வாறு பாரத நாகரிகம் எல்லாவற்றிலேயும் சிறந்து விளங்குகையில்,இக் காலகட்டத்தில் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாகவும்,கொள்ளைக்காரர்களாகவும் (Barbarians )வாழ்ந்து வந்தனர்.நாகரிகத்தில் சிறந்து விளங்கிய இந்திய மக்கள் ஒற்றுமையில் சிறப்பானவர்களாக இருக்கவில்லை.இதனால் அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கி.மு 516 இல் பாரசீக மன்னர் டேரியஸ்,பஞ்சாபின் வடபகுதி மீது படையெடுத்து வென்று,அதனை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். கி.மு 326 இல் கிரேக்கத்தின் மகா அலெக்சாண்டர் பாரசீகத்தை வெற்றி பெற்ற கையோடு பாரசீக மன்னன் டேரியசை விட தன்னுடைய படைகள் வல்லமைமிக்கது என்பதனைக் காட்ட,சிந்து நதி பள்ளத்தாக்கின் ஊடாக பாரதத்தை கைப்பற்ற தொடங்கினார்.
கி.மு 228 இல் அசோகர் இறக்கவே அடுத்து வந்த 5 நூற்றாண்டுகளுக்கு இந்தியா பல்வேறுபட்டவர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது.இதில் குஷானர் என்ற இனத்தவர் முக்கியமானவர்கள்.இவர்கள் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள்.குஷானர்களில் கனிஷ்கரின் காலத்தில் தான் பௌத்த மதம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு குடிபெயர்ந்தது.இவ்வாறாக கி.பி 5 நூற்றாண்டில் பௌத்தமதம் பரதத்தில் இருந்து முழுவதுமாக அழிந்து போயிற்று.மீண்டும் இந்துமதம் தலைத்தோங்கியது.
அடுத்து குப்தர்களின் பொற்காலம் தொடங்கியது.இவர்கள் காலத்தில் வரிகள் மிகக்குறைவு,மரண தண்டனை விதிக்கப்படவில்லை, என்றெல்லாம் குப்தர்களின் ஆட்சியை புகழ்ந்தனர்.5 -6 ஆம் நூற்றாண்டுகளில் ஹூணர்களின் படையெடுப்பால் குப்தர்களின் ஆட்சி துண்டு துண்டாக சிதறியது.இவ்வாறு சிதறிய ராச்சியங்களை ராஜபுத்திரர்கள் ஆட்சி புரியலாயினர்.இவர்கள் பண்டைய பாரதத்தின் போர் வீரர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.இக் கால கட்டத்தில் தான் (கி.பி 9 நூற்றாண்டில்) முஸ்லிம் இனத்தினர் இந்தியாவினுள் ஊடுருவினர்..
No comments:
Post a Comment